கொழும்பின் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்!

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மட்டக்குளி, புளுமெண்டல், கிரேண்ட்பாஸ், மோதர மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கம்பஹா மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை ஆறு மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பின் சில பகுதிகளுக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like this video