கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 83 பேர் கைது

Report Print Kamel Kamel in சமூகம்

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொவிட்-19 நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் சில பகுதிகளின் காவல்துறை பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சட்டத்தை மீறிய 596 பேர் மொத்தமாக இதுவரையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 76 வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.