வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது!

Report Print Thileepan Thileepan in சமூகம்
118Shares

வவுனியா வடக்கு பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்ட மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் அவர்கள் சென்ற வர்த்தக நிலையங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி குறித்த கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றதாக கருதப்படும் வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையம், மில் வீதியில் உள்ள மரக்காலை என மூன்று வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த வர்த்தக நிலையங்களில் பணியாற்றியவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.