மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்
63Shares

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, முனாயக்காடு களப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த ரி 56 ரக துப்பாக்கி மற்றும் 50 ரவைகள் மீட்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுணதீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மட்டக்களப்பு தளபதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளின் பெரேராவின் ஆலோசனைக்கமைய வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜீ.எஸ்.காயப்பிரிகா தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் சம்பவ தினமான நேற்று அதிகாலையில் குறித்த பகுதியில் உரைப்பை ஒன்றில் சுற்றப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும், 2 மகசீன்கள் மற்றும் 50 ரவைகளை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.