வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன் காலமானார்

Report Print Theesan in சமூகம்
159Shares

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் இன்று மாரடைப்பால் காலமாகியுள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக இவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

1994 முதல் 2000ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய கே.பாலச்சந்திரன் கண்டியை பிறப்பிடமாக கொண்டவராவார்.

வவுனியாவில் வசித்து வந்த இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.