மதுஷின் கொலை தொடர்பான விபரங்கள் புனைக்கதை

Report Print Steephen Steephen in சமூகம்
888Shares

மாகந்துரே மதுஷின் கொலை தொடர்பான விபரங்கள் புனைக்கதை என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமிந்த அதுகோரள, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய தரப்பினருக்கு கடிதங்களை அனுப்பி தெரிவித்துள்ளார்.

மதுஷின் மனைவியின் ஆலோசனைக்கு அமைய கடந்த 20 ஆம் திகதி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனது தரப்பு வாதியின் கொலை சம்பந்தமாக சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் முன்வைத்துள்ள விடயங்கள் புனைக்கதை. 2020 ஒக்டோபர் 16 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இருந்த மதுஷை, கொழும்பு குற்றப் விசாரணைப் பிரிவுக்கு மாற்றியது சட்டவிரோதமானது. இது அவரது கொலைக்கான முன் ஏற்பாடு.

தடுப்பு காவல் உத்தரவின் பேரில் ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை கட்டாயம் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டிய மதுஷ், 16 ஆம் திகதி சட்டவிரோதமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டமை, 20 ஆம் திகதி அதிகாலை நடத்த சம்பவத்திற்கான முன் ஏற்பாடு.

அத்துடன் தனது கணவரின் உயிர் பாதுகாப்பு சம்பந்தமான அச்சம் இருப்பதாக கூறி மதுஷின் மனைவி, கடந்த 17 ஆம் திகதி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார் எனவும் சட்டத்தரணி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

You may like this video