இரட்டை குடியுரிமை தொடர்பான ஷரத்து நீக்கப்படும் வரை தொடர்ந்தும் போராடப் போவதாக கூறும் தேரர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்
207Shares

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டை குடியுரிமை தொடர்பான ஷரத்து நீக்கப்படும் வரை தொடர்ந்தும் போராடப் போவதாக முருத்தெட்டுவே ஆனந்த மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நாராஹென்பிட்டியில் உள்ள அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகையில்,

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பௌத்த சங்க சபையினரே முன்னோடியாக இருந்து பாடுபட்டனர்.

பௌத்த சங்க சபையினருக்கு செவிகொடுக்காது செயற்பட்டால், அதனை தோற்கடிக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இங்கு கருத்து வெளியிட்டுள்ள எல்லே குணவங்ச தேரர், தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரும் ஊர்வலத்தில் நாங்களே சென்றோம்.

எனினும் தற்போது வேறு நபர்களை இணைத்து கொண்டு ஊர்வலத்தில் செல்ல முயற்சித்து வருகின்றனர். இதற்கு நாங்கள் இடமளிக்க போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.