தீயில் எரிந்து இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழப்பு

Report Print Theesan in சமூகம்
180Shares

வவுனியா - செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் தீயில் எரிந்து ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்று முன் தினம் தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் தவறுதலாக தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (21) அவர் உயிரிழந்துவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த விஜயா (வயது 24) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது மரணம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.