விசேட பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த ரிஷாட்

Report Print Vethu Vethu in சமூகம்
1405Shares

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் சிலரினால் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு ரிஷாட் பதியூதின் அழைத்து வரப்பட்டிருந்தார்.

விசேட பாதுகாப்பு உடை அணிந்து ரிஷாட் பதியூதின் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய விசேட ஆசனம் ஒன்று அவருக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.