எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் பாதுகாப்புக்காக 70 அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை விஜயம் செய்ய உள்ளனர்.
இலங்கை வரும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் பொம்பியோ கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தங்க உள்ளதுடன் தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் பின்பற்றப்படவுள்ளன.
எம்.சீ.சீ மற்றும் சோபா உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவது தொடர்பான அழுத்தங்களை கொடுப்பதற்காகவே அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.