பெஹலியகொட மீன் சந்தை கொவிட் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணிய 863 பேர் தனிமைப்படுத்தலில்

Report Print Kamel Kamel in சமூகம்
75Shares

பெஹலியகொட மீன் சந்தை கொவிட்-19 நோய்த் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணிய சுமார் 863 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையினரால் நடாத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் இந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெஹலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் மீன் வியாபாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறித்த நோய்த் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணிய தடயங்களின் அடிப்படையில் 863 பேர் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.