நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

Report Print Thileepan Thileepan in சமூகம்
211Shares

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 25 பேரின் முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன.

அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் இருவரின் பி.சீ.ஆர் முடிவுகள் இன்று மதியம் வெளியாகியுள்ளன.

அதில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நெடுங்கேணி பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இரு தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டவர்களில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.