பெஹலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

Report Print Kamel Kamel in சமூகம்
212Shares

பெஹலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலப் பகுதிக்குள் இந்த மீன் சந்தைக்கு சென்றவர்கள் தாமாகவே முன்வந்து இது பற்றிய விபரங்களை வெளியிடுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீன் சந்தைக்கு சென்றவர்கள் உடனடியாக பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து, தங்களை பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டுமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரியுள்ளார்.

இதேவேளை, இந்த மீன்சந்தையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடைய பேணி சுமார் 800க்கும் மேற்பட்டவர்கள் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையினரால் நடாத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் இந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பெஹலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.