மன்னார் - கூராய் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மண் அகழ்வு: ஐவர் கைது

Report Print Ashik in சமூகம்

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கூராய் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அகழ்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ ராஜபக்ச தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக இலுப்பக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.