மட்டு. காத்தான்குடி பகுதியிலுள்ள காட்டில் உருக்குலைந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

Report Print Kumar in சமூகம்
138Shares

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு முருகன் கோயில் வீதியிலுள்ள அடர்ந்த மர முந்திரிகை காட்டினுள் மரத்தில் தொங்கியவாறு குறித்த இளைஞனின் சடலம் உருக்குலைந்த நிலையில மீட்கப்பட்டுள்ளது.

அதே வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கனகசுந்தரம் ஜதீஸ்காந்த் என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

ஸ்தலத்திற்கு விரைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி கே.ஜீவரட்ணம் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

குறித்த இளைஞர் சில தினங்களின் முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.