வவுனியாவில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றிய 82 பேருக்கு இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 27 பேருக்கு திங்கள் கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் பரிசோதனை முடிவுகள்படி நேற்று 3 பேருக்கும், இன்று 2 பேருக்குமாக 5 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 82 நபர்களில் 60 நபர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலும், மிகுதி 22 நபர்கள் அவர்கள் தங்கியிருந்த பிற இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 நபர்களிடமும் இன்று சுகாதார துறையினரால் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.