மட்டக்களப்பில் விசேட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Report Print Kumar in சமூகம்
74Shares

நாடெங்கிலும் கொவிட்- 19 கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார திணைக்களமும், பாதுகாப்பு துறையினரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில் கொரோனா அச்சுறுத்தல் இல்லாத மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிராந்திய சுகாதார திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும், இராணுவத்தினரும் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டதுடன் அது தொடர்பான எச்சரிக்கைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இதேபோன்று வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் வர்த்தக நிலையங்களில் முகக்கவசம் அணிதல், கைகழுவும் சுகாதார செயற்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியைப்பேணுதல் தொடர்பில் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் மீறுபவர்களுக்கு எதிராக சட்டம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் வாகனங்களும் சோதனைகள் நடத்தப்பட்டு சுகாதார நெறிமுறைகள் குறித்து கடுமையான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.