20வது திருத்த சட்டம் நிறைவேற்றம்: பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாட்டம்

Report Print Kumar in சமூகம்

20வது திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வெற்றி பெற்றதையிட்டு நாடெங்கிலும் பட்டாசுகள் கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களினால் பட்டாசுகள் கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் கொழுத்தப்பட்டு மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியதுடன் கட்சி அலுவலகத்திற்கு முன்பாகவும் பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.