கொழும்பில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் கார்னியர் பன்னிஸ்டர் பிரான்சிஸ் மீது சட்ட மா அதிபர் டப்புலா டி லிவேரா இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
குற்றவியல் புலனாய்வுத் துறையால் தாம் கடத்தப்பட்டதாக பொய் கூறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2019, நவம்பர் 25 அன்று, சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளரான இவர், தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு கூறி பலவந்தமாக தாம் கடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
எனினும் குறித்த பணியாளர் பொய் கூறியதாக கண்டறியப்பட்ட அடிப்படையில் 2019, டிசம்பர் 16 அன்று கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் அவருக்கு டிசம்பர் 30 அன்று பிணை வழங்கப்பட்டது.