வவுனியாவில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் வெடி கொளுத்திக் கொண்டாட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
161Shares

அரசமைப்பின் 20வது சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதையடுத்து வவுனியாவில் வெடி கொளுத்திக் கொண்டாடப்பட்டது.

வவுனியா நகரில் இன்றிரவு ஒன்றுகூடிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் வெடிகளைக் கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

முன்னதாக 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்து அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.