கொவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6287 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் 259 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று பரவியுள்ளமை பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது.
இதில் 182 பேர் பேலியகொடபகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 75 மினுவான்கொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 2 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாத்திரம் 309 பேருக்கு கொரோனா
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இன்று மாத்திரம் 309 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பேலியகொட மீன் சந்தைப் பகுதியில் 188 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்த 02 பேருக்கும், கட்டுநாயக்கவில் 22 பேருக்கும், மினுவாங்கொடை கொரோனாத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் போணிய 97 பேருக்கும் இன்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 287ஆக உயர்வடைந்துள்ளது. தற்போது 2,712 தொற்றாளர்கள் 23 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் 3 ஆயிரத்து 561 பேர் குணமடைந்தும் 14 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.