சஹ்ரானின் மனைவி உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்!

Report Print Ajith Ajith in சமூகம்
157Shares

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே) தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

இந்த 7 பேருக்கும் இதுவரை விதிக்கப்பட்டருந்த தடுப்புக்காவல் உத்தரவு இன்றுடன் நிறைவடைந்தது.

இந்தநிலையில் இன்று இந்த , ஏழு பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவர்களை எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்திற்கு இன்று மாலை சஹ்ரானின் மனைவி அழைத்து வரப்பட்டார்.

அத்துடன் நாளைய தினம் ஆணைக்குழுவில் அவரை மீண்டும் முன்னிலைப்படுத்துமாறு ஆணைக்குழு உத்தரவிட்டது.