வவுனியாவில் மானை வேட்டையாடிய நபரை மடக்கிப்பிடித்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - புளியங்குளம் காட்டுப்பகுதியில் மானை வேட்டையாடி இறைச்சியாக்க முற்பட்ட நபரை வவுனியா மாவட்ட செயலக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மடக்கி பிடித்துள்ளனர்.

வவுனியா வடக்கு புளியங்குளம் காட்டுப்பகுதியில் மான், பன்றி போன்ற விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வவுனியா மாவட்ட செயலக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் புளியங்குளம் பொலிஸாரின் உதவியுடன் புளியங்குளம் காட்டுப் பகுதிக்கு நேற்று மாலை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சென்றிருந்தனர்.

இதன்போது காட்டுப்பகுதியில் மோட்டார்சைக்கின் நின்றதை அவதானித்த அதிகாரிகள் காட்டுப்பகுதியில் மேலும் ஊடுருவி சென்றுள்ளனர்.

அச்சமயத்தில் மான் ஒன்றினை வேட்டையாடி இறைச்சியாக்க முற்பட்ட சமயத்தில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை புளியங்குளம் பொலிஸாருடன் இணைந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் கைப்பற்றப்பட்ட உயிரிழந்த மான், மோட்டார்சைக்கிள் என்பனவும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளன.