தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்ற இடங்கள் தொடர்பான தகவல்!

Report Print Vethu Vethu in சமூகம்

கொஸ்கம பிரதேச வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்று வந்த இடங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை குறித்த நோயாளிள வைத்தியசாலையில் இருந்து வெளியேறி அவிசாவளை வீதிக்கு வந்துள்ளார்.

தூர பயண பேருந்தில் ஏறி அவர் ஒருகொடவத்தை நோக்கி பயணித்துள்ளார். அங்கிருந்து சேதவத்தையில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. இதற்கு மேலதிகமாக அவர் சைக்கிள் ஒன்றில் பொரளை, சஹஸ்புர பகுதிக்கு சென்றுள்ளார்.

குறித்த இளைஞன் சஹஸ்புர வீட்டுத் தொகுதியில் 13 மாடியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.