கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படடுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொட, மருதானை ஆகிய பகுதிகளும் பேருவளை, பயாகல, அழுத்கம ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மருதானை மற்றும் தெமடகொட ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.

பேருவளை, பயாகலை மற்றும் அழுத்கம ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொழும்பின் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.