வார இறுதியில் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாது

Report Print Kamel Kamel in சமூகம்

வார இறுதியில் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாது என கொவிட்-19 நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சில காவல்துறை பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தப் பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை எனவும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்ற அச்சத்தினால் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இவ்வாறு அதிகளவில் மக்கள் குழுமுவது நோய்த் தொற்று பரவுகைக்கு ஏதுவாக அமையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.