இலங்கையின் இன்றைய கொரோனா நிலவரம்! வெளியான அறிக்கை

Report Print Kamel Kamel in சமூகம்

இன்றைய தினம் இதுவரையில் 865 கொரோனா வைரஸ் தொற்றாளிகள் இலங்கையில் பதிவாகியுள்ளனர்.

முன்னதாக 609 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை இன்றைய தினம் கிடைக்கப் பெற்ற பரிசோதனை முடிவுகள் மூலம் தெரியவந்தது.

இந்த நிலையில் மேலும் 256 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திரா சில்வா அறிவித்துள்ளார்.

இந்த 256 பேரில் மினுவான்கொடை கொத்தணியுடன் தொடர்புடைய 217 பேரும், பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடைய 39 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதன்படி, இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 7153 என்பதுடன், இதில் 3495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள், மேலும் 3644 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.