அரந்தலாவ பிக்குகள் படுகொலையை விசாரிக்குமாறு சட்டமா அதிபர் உத்தரவு

Report Print Rakesh in சமூகம்

அரந்தலாவ பௌத்த பிக்குகள் படுகொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசார ஜயரத்னவால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறிக்கைகளைப் பதிவு செய்து விசாரணைகளைத் தொடங்குமாறும், இரு வாரங்களுக்குள் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலில் 34 பௌத்த பிக்குகள் அரந்தலாவ பிரதேசத்தில் கொல்லப்பட்டனர் எனவும், அந்த தாக்குதலிலிருந்து 12 பௌத்த பிக்குகள் தப்பியிருந்தனர் எனவும் கூறப்பட்டிருந்தது.