தென்னிலங்கையில் திடீரென உயிரிழந்த மீனவர் - PCR பரிசோதனை

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையின் காலி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியுள்ளார். உடனடியாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளளார்.

பீசீஆர் பரிசோதனைக்காக அவரது சடலத்தின் பாகங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மீனவரின் திடீர் மரண பரிசோதனை இன்று காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.