சமூக பரவலாக பதிவாகி வரும் கொரோனா தொற்று! அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் தற்போது சமூகத்தில் இருந்து பதிவாகி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது

அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித்த ஹேரத் இதனை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று இரண்டாவது தடவையாக வெளியிடப்பட்ட பதிவுகளின்படி 259 தொற்றாளிகளில் இரண்டு பேரை தவிர ஏனையோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியில் இருந்தே கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

இதன் அர்த்தம் அவர்கள் சமூகத்தில் இருந்தே தொற்றாளிகளாக கண்டறியப்பட்டார்கள் என்பதாகும் என்று ஹரித்த அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

எனவே தற்போது நிலைமை வெளிப்படையாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூகம் தற்போது பாதுகாப்பாக இருக்கிறது என்பதை கூறமுடியாது. இந்தநிலையில் ஏன் இன்னும் சுகாதார பரிந்துரைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே இந்த நோய்ப்பரவல் சமூகத்துக்குள் மேலும் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.