வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் படுகாயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
109Shares

வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா - வைரவர் கோவில் வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த கனரக வாகனமொன்றினை திருப்ப முற்பட்ட சமயத்தில் அப்பாதையூடாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து, வாகனத்துடன் மோதி அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியான 22 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.