மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் இருக்கும் இடத்தை காண்பிக்க அழைத்துச் செல்லப்பட்ட பொடி லெசி

Report Print Steephen Steephen in சமூகம்

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவரான பொடி லெசிக்கு சொந்தமான ரி.56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி என்பன மீட்டியாகொட பொலிஸ் பிரிவில் தெல்வத்தை பிரதேசத்திலுள்ள அவரது பாட்டியின் வீட்டுக்கு பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லெசியிடம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் விசாரணைகளில் கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த துப்பாக்கிகளை கைப்பற்றியதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொடி லெசியையும் அவரது விருப்பத்தின் பேரில், குறித்த இடத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் புதிய பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரசாரத் ரணசிங்க, திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்சா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளது.