திருக்கோவில் பகுதியில் உள்ளூர் துப்பாக்கியுடன் 5 பேர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயவீரா தலைமையிலான குழுவினர் குறித்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில், காஞ்சாரம்குடா பிரதேசத்தில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மறைத்து வைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான 5 சட்டவிரோத துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.