தலதா மாளிகைக்கு வருவோர் கட்டாயம் அடையாள அட்டைகளை கொண்டு வர வேண்டும்..

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கைக்குள் பரவி வரும் கொரோனா வைரஸ் நிலைமையை கவனத்தில் கொண்டு கண்டி தலதா மாளிகைக்கு வழிபாடுகளில் ஈடுபட வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டைகளை கொண்டு வர வேண்டும் என தியவடன நிலமே பிரதீப் திலங்க தேரர் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகை மற்றும் அங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றும் அவற்றுக்கு அருகில் உள்ளவர்கள் தலதா மாளிகைக்குள் நுழைவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அத்துடன் தலதா மாளிகையின் வளாகத்திற்குள் வரும் அனைத்து பக்தர்களும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தியவடன நிலமே கேட்டுக்கொண்டுள்ளார்.