மேலும் இரு பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

கொத்தட்டுவ மற்றும் முல்லேரியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் இன்று மாலை 7 மணியில் இருந்து அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே கொட்டாஞ்சேனை, மருதானை, கிரான்ட்பாஸ், மாளிகாவத்தை, மட்டக்குளி, தெமட்டகொட உள்ளிட்ட பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ளது.

இதேவேளை, நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றையதினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 15ஆவது நபர் உயிரிழந்தார்.

You may like this video