மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ள நுகேகொடை வார சந்தை

Report Print Steephen Steephen in சமூகம்

நுகேகொடை மீன் சந்தைக்குள் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட உள்ளது என குறித்த அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மறு அறிவித்தல் வரை நுகேகொடை வார சந்தையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகேகொடை சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் கூறியுள்ளது.