பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய 471 கொரோனா தொற்றாளர்கள் நான்கு நாட்களில் கண்டுபிடிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்
180Shares

பேலியகொடை மீன் சந்தையுடன் சம்பந்தப்பட்ட 471 கொரோனா தொற்றாளர்கள் கடந்த 4 தினங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது 5 மடங்கு அதிகரிப்பு என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு நகரில் முதல் நிலை தொற்றாளர்கள் அனைவரையும் காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்காது பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தை விட தற்போது கொரோனா வைரஸ் பரவும் நிலைமை அதிகரித்துள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் குளிரான சூழல் காணப்படுவதன் காரணமாக வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

அத்துடன் மீன் சந்தையில் ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் ருவான் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.