வவுனியாவில் கொரோனாத் தொற்றுக்குள்ளான இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்

Report Print Suman Suman in சமூகம்

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களில் ஒருவர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் உயர் அதிகாரியான பெண் ஊழியர் ஒருவரின் மகன் என்று தெரியவந்துள்ளது.

இன்று மாலை வெளியாகியிருந்த தரவுகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் குறித்த தொற்றாளரின் குடும்பம் வசித்து வருவதாகவும், தொற்றுக்கு உள்ளான இளைஞர் கடந்த 19ம் திகதி உதயநகரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வந்து சென்றதாக தெரியவந்துள்ளது.

இளைஞர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் வீட்டாரும் சுயதனிமைக்கு உட்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரியவருகிறது.