நாடாளுமன்றில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தருக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்
59Shares

நாடாளுமன்றில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற காவல்துறைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த துணை காவல்துறைப் பரிசோதகர் ஒருவருக்கே இவ்வாறு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகத்தர் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காவல்துறை உத்தியோகத்தருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 7 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நோய்த்தொற்று பரவியுள்ள காவல்துறை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் பிரதான நாடாளுமன்ற வளாகத்தில் கடமையாற்றியவர் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.