நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா

Report Print Vethu Vethu in சமூகம்
295Shares

நாடாளுமன்ற புலனாய்வு பிரிவில் சேவை செய்யும் உப பொலிஸ் பரிசோதகருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த உப பொலிஸ் பரிசோதகர் நாடாளுமன்றத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் உணவகத்திற்கு தேவையான மீன் கொள்வனவு செய்வதற்கு பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய அவருக்கு நெருக்கமாக செயற்பட்ட 7 பேர் பீசீஆர் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொலிஸ் அதிகாரி நாடாளுமன்ற வளாகத்துடன் நேரடி தொடர்பு வைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.