அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்
1135Shares

கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நாளைய தினம் நீக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு அதிகமாக தொடர்ந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நாளைய தினம் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.