வவுனியா நகரசபையின் உடனடி நடவடிக்கை: தொற்று நீக்கப்பட்ட பொதுச்சந்தை

Report Print Thileepan Thileepan in சமூகம்

நாடளாவிய ரீதியில் கொவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொது மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான பொதுசந்தையில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்க வேண்டுமென உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கமைய வவுனியா நகரசபையினரினால் பொதுச்சந்தை இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜ் சபேசன் தலைமையில் பொதுச்சந்தையின் முன்பகுதி , பின்பகுதி என்பன தண்ணீர் அடித்து சுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், மருந்தும் வீசப்பட்டுள்ளது.