நாட்டில் பல பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படும் பொதுமக்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏதாவது ஒரு வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டால் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதியில் பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரையில் 56 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மாட்டத்தின் 33 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளிலும், கொழும்பில் 12 பொலிஸ் பிரிவுகளிலும், களுத்துறையில் 3 பொலிஸ் பிரிவுகளிலும், வெல்லம்பிட்டிய, கொத்தட்டுவ, முல்லேரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது மக்கள் முடிந்தளவு வீட்டிலேயே இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You may like this video