குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரச தொழில் வழங்கும் திட்டம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரச தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

இதன் ஒரு கட்டமாக ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி தெரிவு செய்யப்பட்ட 83 பயிலுனர்களுக்கு நியமனக்கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தேசமான்ய A.R.A.ஹுசைன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வட்டார அமைப்பாளரும், சமூக சேவையாளருமான சியாம் ஹாஜியார் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.