முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்பு

Report Print Yathu in சமூகம்
74Shares

கிளிநொச்சி - பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று வாள்கள் இன்று பளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இருந்து மேற்படி வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏ9 வீதிக்கு அருகாமையில் மின்சார இணைப்புகளுக்காக அடுக்கபட்டிருந்த மின்கம்பங்களுக்கு இடையில் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் குறித்த வாள்கள் மீட்கபட்டுள்ளன.

அவை எதற்காக அங்கு மறைத்து வைக்கபட்டதெனவும், அதனை யார் அங்கு மறைத்து வைத்தார்கள் என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ஏதேனும் குற்றச்செயல்களிற்கான திட்டமிடல்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.