கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியில் நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் மற்றும் மருந்தகங்கள் என்பன பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
அத்துடன் வங்கிகளை திறந்து வைக்குமாறும் கோரப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
கடந்த 21ம் திகதி முதல் நாளை காலை 5 மணிவரை கம்பஹா மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் கொள்வனவிற்காகவே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை,கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
You may like this video