அளுத்கம, பேருவளை மற்றும் பயாகல பொலிஸ் பிரிவுகளில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களினால் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே அளுத்கம, பேருவளை மற்றும் பயாகல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரள்ளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
You may like this video