கல்முனை வீதியில் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் படுகாயம்

Report Print Rusath in சமூகம்
101Shares

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி ஆரையம்பதி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இந்து ஆலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளும், கல்முனை பக்கமாகயிருந்து மட்டக்களப்பு திசையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.