பத்து வெளிநாடுகள் இலங்கையின் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஒஸ்ரியா, நோர்வே, சுவீடன், சுவிஸர்லாந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளவர்கள் தொடர்பான தகவல்களை மறைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரட்டை குடியுரிமை பெற்ற பிரஜைகளில் இலங்கைக்கு தேவையான நபர்கள் இருப்பதன் காரணமாகவே இந்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள், பிரித்தானியா, சுவிஸர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வசித்து வருவதாக அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
You may like this video