பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று! வெளியாகியுள்ள செய்தி பொய்யானது

Report Print Steephen Steephen in சமூகம்
64Shares

பிரதமரின் செயலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக பரவிவரும் செய்தி பொய்யானது என பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரதமரின் செயலகம், அலரி மாளிகை அல்லது கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த எவருக்கும் கொரோனா தொற்றவில்லை என்பதினை உறுதிப்படுத்துகிறேன்.

பிரதமரின் செயலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக பரவி வரும் செய்தியில் எந்த உண்மையுமில்லை.

எனினும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து இயங்கும் வெளிப்பிரிவு ஒன்றின் உத்தியோகஸ்தருக்கே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பிரதமர் வெளியிடங்களில் கலந்துக்கொள்ளும் வைபவங்களின் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனிப்பதில் மாத்திரம் சம்பந்தப்பட்ட அந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த 17 ஆம் திகதி முதல் கடமைக்கு திரும்பவில்லை எனவும் ரொஹான் வெலிவிட்ட தனது அறிக்கையில் கூறியுள்ளார்.